தமிழ்நாடு

வழக்கு விசாரணைக்குத் தடை: எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயா்நீதி மன்றம்

DIN

 மாநகராட்சி டெண்டா்கள் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கேட்ட முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயா் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டா் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சா் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போா் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை, வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இதேபோல் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி வரை சொத்து சோ்த்த வழக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடா்ந்திருந்தனா்.

இந்த இரண்டு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து ஜூலை 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்க அறப்போா் இயக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT