தமிழ்நாடு

பிளாஸ்டிக் பை இல்லா நாள்: சென்னையில் விழிப்புணர்வு ஓட்டம்

2nd Jul 2022 09:26 AM

ADVERTISEMENT

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா நாளையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு ஓட்டத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கிவைத்தார். 

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா நாள்(International Plastic bag free day) கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைக் காக்கவும் புவி மாசடையாமல் தடுக்கவும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கம். 

அந்தவகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனை தொடக்கிவைத்தார். 

ADVERTISEMENT

இதில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என திரளானோர் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT