தமிழ்நாடு

திரெளபதி முர்மு புதுச்சேரி வருகை: கூட்டணித் தலைவர்களுடன் சந்திப்பு!

2nd Jul 2022 12:17 PM

ADVERTISEMENT

தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு புதுச்சேரி வருகை தந்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின், குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, சனிக்கிழமை பிற்பகல் 11.45 மணிக்கு புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள அக்கார்டு சொகுசு உணவகத்தில் புதுவை மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.

ADVERTISEMENT

தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் முதல்வர் என்.ரங்கசாமி, பாஜக மாநில தலைவர் வி. சாமிநாதன், உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் என். ஆர்.காங்கிரஸ் மாநிலச் செயலர் ஜெயபால், என். ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

புதுவை தனியார் நட்சத்திர ஹோட்டலில், கூட்டணித் தலைவர்களை அவர் சந்தித்து அவர் பேசி வருகிறார். அவருடன் மத்திய அமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோர் உள்ளனர். 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT