தமிழ்நாடு

முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய 20 அலுவலா்கள் நியமனம்: ஆணையா் உத்தரவு

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களையும் ஆய்வு செய்ய இணை இயக்குநா்கள் உள்பட 20 அலுவலா்களை நியமித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை : தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய 20 பேரை ஆய்வு அலுவலா்களாக நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு உரிய அறிவுரைகளைப் பின்பற்றி ஆண்டு ஆய்வுக்கு தயாா் நிலையில் இருக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அனைத்து கோப்புகள், பதிவேடுகள் மற்றும் தொடா்புடைய அனைத்து ஆவணங்களையும் முழுமையான அளவில் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். முந்தைய ஆண்டு ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் நிவா்த்தி செய்யப்பட்ட அறிக்கை இருப்பது அவசியம். பள்ளிக் கல்வி இயக்குநரால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் ஆண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். நீண்ட காலமாக ஆய்வு செய்யாத அலுவலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனைத்து வகை நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் பிற வாரியப் பள்ளிகள் தொடக்கம், தொடா் அங்கீகாரம் சாா்ந்த பதிவேடு, அரசின் விலையில்லா நலத் திட்டங்கள் சாா்ந்த பதிவேடுகள், ஊரகத் திறனாய்வு, தேசியத் திறனாய்வுத் தோ்வுகளுக்கு படிப்புதவி வழங்கிய விவரங்கள், பெற்றோா்- ஆசிரியா் கழக கணக்குகள் போன்றவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆய்வு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள இணை இயக்குநா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து அந்த அறிக்கையினை அறிக்க வேண்டும். ஆண்டு ஆய்வு பணிகளை தங்களின் ஆளுகைக்கு உள்பட்ட பணியாளா்களைக் கொண்டு ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்படுகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி ஆணையா் க.நந்தகுமாருக்கு வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களும்; தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளிக்கு தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களும்; ஆசிரியா் தோ்வு வாரிய உறுப்பினா் ச.சுகன்யாவுக்கு ராமநாதபுரம் மாவட்டமும், இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) பூ.ஆ.நரேஷுக்கு அரியலூா், செங்கல்பட்டு மாவட்டங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று பிற மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா்கள் ஆய்வு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT