தமிழ்நாடு

மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் விரைவில் அன்னதானம்: அமைச்சா் தகவல்

DIN

ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரா் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலா்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் சீராய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது: நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு ராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரா் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பத்து திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தா்கள் அனைவருக்கும் தற்போது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மேலும், ஐந்து திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். 121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பசு மடங்கள் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மேலும், பசுமைத் திருக்கோயில்கள் திட்டத்தின் கீழ் 5 திருக்கோயில்களின் அன்னதானக் கூடங்களில் பசுமை எரிவாயு திட்டம் ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் செயல்படுத்தப்படவுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT