தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் தங்கம் பறிமுதல்

2nd Jul 2022 05:55 PM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு தங்கம் பறிமுதல் பறிமுதல் செய்ப்பட்டது. 

ரகசிய தகவலின் அடிப்படையில், மும்பையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது இம்ரானை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

இதையும் படிக்க- கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் நின்றிருந்த ஓ. பன்னீர்செல்வம்

அப்போது பையில் மறைத்து எடுத்து வரப்பட்ட 11 பண்டல்களில் தங்கப்பசை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து 2.137 கிலோ தங்கம் பெறப்பட்டது. இதன் மதிப்பு ரூ.98.55 லட்சம் ஆகும்.

ADVERTISEMENT

தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட பயணியைக் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT