தமிழ்நாடு

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 அரசு மருத்துவர்கள் உள்பட 3 பேர் கைது

2nd Jul 2022 09:34 AM

ADVERTISEMENT

மேட்டூர்: சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 அரசு மருத்துவர்கள் உள்பட 3 பேர் மயங்கிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அரசாணை 354-ஐ  அமல்படுத்த வேண்டும், கரானாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசின் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரை அருகே விருதாசம்பட்டி பிரிவு சாலையில் மறைந்த மருத்துவ சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை, பொருளாளர் மருத்துவர் நளினி, மறைந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யா ஆகியோர் கடந்த மாதம் 29ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இன்று காலை இவர்கள் மூவரும் போராட்டக் களத்தில் மயங்கிய நிலையில் இருந்ததால், அவர்களை போலீசார் கைது செய்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT