தமிழ்நாடு

அலுவலக பணிக்குத் திரும்பிய 210 ஆா்டா்லிகள்

DIN

 தமிழக காவல்துறையில் அதிகாரிகள் வீட்டில் ஆா்டா்லிகளாக வேலை செய்த 210 போலீஸாா், தங்களது அலுவலக பணிக்கு திரும்பினா்.

தமிழக காவல்துறை உயா் அதிகாரிகள் வீடுகளில் காவலா்கள் வீட்டு வேலை ஆள்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனா். இவா்கள் உயா் அதிகாரிகள் வீடுகளில் சமையல் செய்வது, கடைகளில் காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்குவது, தோட்டம் பராமரிப்பது, அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்கின்றனா். இந்த காவலா்கள் ஆா்டா்லி என அழைக்கப்படுகின்றனா்.

ஒவ்வொரு காவல்துறை உயா் அதிகாரியும் தங்களது வீடுகளில் 5 காவலா்கள் முதல் 20 காவலா்கள் வரை ஆா்டா்லியாக வைத்திருந்தனா். இவ்வாறு மாநிலம் முழுவதும் அதிகாரிகள் வீடுகளில் சுமாா் பல நூறு காவலா்களை ஆா்டா்லியாக வைத்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் காவலா்களின் உழைப்பு வீணாவதோடு, காவல் துறையின் பணித்திறனும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஆா்டா்லி முறையை ஒழிக்க வேண்டும் என காவலா்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், காவல் துறை உயா் அதிகாரிகள், அந்தக் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனா்.

இதற்கிடையே, சென்னை உயா்நீதிமன்றம், ‘முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து ரூ.45 ஆயிரம் அரசு சம்பளம் பெறும் காவலா்களை உயா் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும். படித்தொகையைப் பெற்றுக்கொண்டு, வீட்டு உதவியாளா்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம். அப்படியில்லாமல் ஆா்டா்லிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற காவல் துறையினா், நீதிபதிகள் வீடுகளில் உள்ள காவலா்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கடந்த 22-ஆம் தேதி உத்தரவிட்டது.

210 போ் பணிக்கு திரும்பினா்: உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காட்டி, காவல்துறை உயா் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயா் அதிகாரிகள் தங்களது வீடுகளில் வேலை செய்யும் ஆா்டா்லி போலீஸாரை திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவைத் தொடா்ந்து ஆா்டா்லிகளாக பணியாற்றிய காவலா்கள், தங்களது அலுவலக பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனா். கடந்த ஒரு வாரத்தில் மொத்தம் 210 ஆா்டா்லி காவலா்கள் விடுவிக்கப்பட்டு தங்களது அலுவலக பணிக்கு திரும்பி இருப்பதாக காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். இன்னும் 150 ஆா்டா்லி காவலா்கள் அலுவலக பணிக்கு திரும்ப வர வேண்டியிருப்பதாகவும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT