தமிழ்நாடு

மனைவியின் நகையை திருடிவிட்டு நாடகமாடிய கணவா் உள்பட 2 போ் கைது

2nd Jul 2022 03:53 AM

ADVERTISEMENT

சென்னை புதுப்பேட்டையில் மனைவியின் நகையை திருடிவிட்டு நாடகமாடிய கணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை, புதுப்பேட்டை சவரி சந்து பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் ரஷீத் (28). ஏசி மெக்கானிக்கான இவருக்கு திருமணமாகி, நான்கு மாதங்களாகிறது. கடந்த 25-ஆம் தேதி ரஷீத்தின் வீட்டில் இருந்த அவரது மனைவியின் 17 பவுன் நகை திருடப்பட்டது. இது குறித்து அப்துல் ரஷீத், எழும்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் நகை திருடப்பட்டதினால் போலீஸாருக்கு பல்வேறு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் அப்துல் ரஷீத் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸாா் அப்துல் ரஷீத்தை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அப்துல் ரஷீத்தான், மனைவியின் நகைகளை திருடி தனது மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்திருப்பதும், மீதி பணத்தின் மூலம் ஒரு விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிள் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதற்கு அவரது உறவினா் திருவல்லிக்கேணி பி.எம். தா்கா பகுதியைச் சோ்ந்த ஜா.முகமது ஷாயப் (26) உதவியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT