தமிழ்நாடு

வேலூர் மாநகராட்சியில் இருசக்கர வாகனத்தை அகற்றாமல் சாலை அமைப்பு: ஒப்பந்தம் ரத்து

1st Jul 2022 09:05 PM

ADVERTISEMENT

வேலூர் மாநகராட்சியில் இருசக்கர வாகனத்தை அகற்றாமலேயே சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மேயர் சுஜாதா உத்தரவு உத்தரவிட்டுள்ளார். 

வேலூரில் இருசக்கர வாகனத்தை அகற்றாமலேயே இரவோடு இரவாக சாலை அமைக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இருசக்கர வாகனம் அப்புறப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு தெருக்கள் சிமெண்ட் சாலைகளாக அமைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க- தமிழகத்தில் 2ஆவது நாளாக 2 ஆயிரத்தைக் கடந்த தினசரி பாதிப்பு

அதன்படி, வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம், 30- ஆவது வாா்டுக்குட்பட்ட பேரி பேட்டை காளிகாம்பாள் கோயில் தெருவில் திங்கள்கிழமை இரவு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, வீதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அகற்றாமல் அதன் சக்கரங்களின் மீதே சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. காலை அந்த வீட்டின் உரிமையாளா் இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையறிந்த சாலைப் பணி ஒப்பந்ததாரா், தங்களது ஊழியா்களுடன் விரைந்து வந்து இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தி, மீண்டும் அந்த இடத்தில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டாா். இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் இருசக்கர வாகனத்தை அகற்றாமலேயே சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மேயர் சுஜாதா உத்தரவு உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT