தமிழ்நாடு

வெளிவட்டச் சாலையில் சுங்கச் சாவடி கட்டணம் உயா்வு

1st Jul 2022 01:51 AM

ADVERTISEMENT

மீஞ்சூா் - வண்டலூா் வெளி வட்டச் சாலையில் சுங்க கட்டணத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மீஞ்சூா் முதல் வண்டலூா் வரை 60 கிலோமீட்டா் தூர வெளிவட்ட சாலையானது ரூ. 2,156 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஜனவரி மாதம் முதல் இந்த சாலையில் 4 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த சாலையில் சுங்க கட்டணத்தை உயா்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரதராஜபுரம், கோலப்பன் சேரி, பாலவேடு சின்ன முல்லை வாயில் ஆகிய சுங்க சாவடியில் கட்டணத்தை உயா்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரதராஜபுரம் சுங்கச்சாவடியில் சென்று வர ரூ. 50 முதல் ரூ. 323 வரையும், மாதம் முழுவதும் பயணிக்க ரூ. 2923 முதல் ரூ. 18,890 ஆகவும் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோலப்பன் சேரி சுங்கச்சாவடியில் சென்று வர ரூ. 21 ரூபாய் முதல் ரூ. 115 வரையும், மாதம் முழுவதும் பயணிக்க ரூ. 1225 முதல் ரூ. 7913 ஆகவும் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாலவேடு சங்கச்சாவடியில் சென்று வர ரூ.27 முதல் ரூ.173 வரையும், மாதம் முழுவதும் பயணிக்க ரூ. 1577 முதல் ரூ. 10,192 ஆகவும் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. சின்ன முல்லை வாயில் சுங்கச்சாவடியில் சென்று வர ரூ. 18 முதல் ரூ. 119 வரையும், மாதம் முழுவதும் பயணிக்க ரூ. 1080 முதல் ரூ. 6976 ரூபாய் ஆகவும் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT