தமிழ்நாடு

சென்னையில் வரும் 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

1st Jul 2022 04:52 PM

ADVERTISEMENT

சென்னையில் வரும் 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் வரும் 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. முதல்வர் அறிவுறுத்தலின்படி முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் ஓராண்டு காலத்தில் தொழிற்துறையில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவரை 132 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 

இதையும் படிக்க- அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் உதவியாளர்கள் கைது

ADVERTISEMENT

கடந்த ஓராண்டில் ரூ.94,975 கோடி முதலீடு, 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. உலகளவில் திறன் மேம்பாட்டில் தமிழகம் மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றன. 

கோவை, மதுரை மாவட்டங்களில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமையவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT