தமிழ்நாடு

மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது தமிழ்நாடு அரசு

1st Jul 2022 05:47 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அணை பாதுகாப்பு சட்டம் 2021 அடிப்படையில் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சென்னையில் வரும் 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

மாநிலத்தில் உள்ள அணைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT

அணை பாதுகாப்பு சட்டத்தின்படி அணை பாதுகாப்பு அமைப்பை மாநில அளவில் ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

அணை பாதுகாப்பு சட்டம்-2021, இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட அணைகளை முறையான கண்காணிப்பு, ஆய்வு, பராமரிப்பு செய்வதன் மூலம் பேரழிவு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை அமைப்புரீதியாக தடுப்பதற்கான நடைமுறையை வழங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT