தமிழ்நாடு

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

1st Jul 2022 04:35 PM

ADVERTISEMENT

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளின் விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணி கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது.

சென்னை, கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்த முறைகேடுகள் தொடா்பாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போா் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமா்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிக்க: ‘இந்தியா இந்துக்களுக்கு மட்டுமானதல்ல’: மத மோதல்கள் குறித்து அமர்த்தியா சென் கருத்து

இதில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளின் விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து ஜூலை 18'க்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

ஒப்பந்த முறைகேடு தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT