தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம்!

1st Jul 2022 12:54 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளது. மேலும், சான்றிதழ்களை பெற அதிக அளவில் மாணவர்கள் செல்வதால் தொற்று ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க: தேசிய மருத்துவர்கள் நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

மேலும், தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை  தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு தமிழகத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. கரோனா பாதிப்பு அதிகமானால் கோவிட் கேர் செண்டர்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது தமிழகத்தில் கரோனா தாக்கம் குறைவாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை  தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT