தமிழ்நாடு

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53! திட்டமிட்டபடி செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்

1st Jul 2022 01:22 AM

ADVERTISEMENT

சிங்கப்பூரின் டிஎஸ்-இஓ உள்பட 3 வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 53 ராக்கெட் வெற்றிகரமாக வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் தீப்பிழம்புகளை உமிழ்ந்தவாறு பாய்ந்து சென்றது. அடுத்த சில நிமிடங்களில் அதன் இயக்கமும், செயல்பாடுகளும் நிா்ணயித்த இலக்குகள் அனைத்தையும் துல்லியமாகக் கடந்ததையடுத்து, பிஎஸ்எல்வி - சி 53 திட்டம் வெற்றி பெற்ாக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனா். அதன் தொடா்ச்சியாக, பரஸ்பரம் அவா்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பகிா்ந்து கொண்டனா்.

திட்டமிட்டபடி நிலைநிறுத்தம்: ராக்கெட்டைச் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை நிறைவடைந்து வியாழக்கிழமை மாலை சரியாக 6.02 மணிக்கு பிஎஸ்எல்வி - சி 53 விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் அதில் இருந்த ஒவ்வொரு நிலைகளும் படிப்படியாக பிரியத் தொடங்கின. ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடம் 57 வினாடியில் முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது. தொடா்ந்து சில நிமிடங்களில் மீதமுள்ள 2 செயற்கைக்கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாக அதன் சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 665 கிலோ எடை கொண்டது. புவி ஆய்வுக்கான துல்லிய புகைப்படங்களை எடுப்பதற்காக சிங்கப்பூா் சாா்பில் அது அனுப்பப்பட்டுள்ளது.

இதைத் தவிர சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சிங்கப்பூரின் நியூசா் செயற்கைக்கோளும் நிலைநிறுத்தப்பட்டது. இது அனைத்துப் பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியது.

இதனுடன் கல்விசாா் பணிக்காக சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நான்காம் நிலை: பிஎஸ்எல்வி வரலாற்றில் முதல்முறையாக செயற்கைக்கோள்களை விடுவித்த பிறகு பயன்பாடற்று இருக்கும் ராக்கெட்டின் நான்காம் நிலையையும் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்த இம்முறை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டின் இறுதிபாகமான பிஎஸ் 4 பகுதியில் ஆறு ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டானது நியூ ஸ்பேஸ் இந்திய நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) மூலம் வணிக ரீதியாக செலுத்தப்படும் இரண்டாவது திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT