தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

1st Jul 2022 08:28 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,555 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டு லேசான மழை  பெய்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2,559 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 3,555 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க | குடியரசுத் தலைவா் தோ்தல்: தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்கு மதிப்பு எவ்வளவு?

ADVERTISEMENT

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 104.78 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 104.22 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 70.41டி.எம்.சியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT