தமிழ்நாடு

வேலூர்: பைக் மட்டுமல்ல, ஜீப் மீதும் போடப்பட்ட சாலை

DIN

வேலூர்: வேலூர் மாநகராட்சியின் பேரி காளியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமலேயே ஓரிரு நாள்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை போடப்பட்டது. 

இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே,  அதே வேலூரில் சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓடாத பழைய ஜீப்பையும் அப்புறப்படுத்தாமல் ஏடாகூடமாக தார்ச்சாலை போடப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்ததன்பேரில், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் வந்து கிரேன் மூலம் ஜீப்பை பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தியிருக்கிறார்.  இதையடுத்து சாலை சீர் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT