தமிழ்நாடு

பகலில் வெயில் கொளுத்தினால்.. தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் தகவல்

1st Jul 2022 12:54 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு சில நாள்களாக இரவு நேரத்தில் பலத்த மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

வியாழக்கிழமை இரவு சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதையும் படிக்க.. தங்கம் இறக்குமதி வரி உயர்வால் என்னவாகும்? விலை அதிகரிக்குமா?

ADVERTISEMENT

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்துள்ளது.

மழை நிலவரம்
வில்லிவாக்கம் - 62 மில்லி மீட்டர்
வண்ணாரப்பேட்டை - 51 மில்லி மீட்டர்
வியாசார்பாடி - 45 மில்லி மீட்டர்
நுங்கம்பாக்கம் - 37 மில்லி மீட்டர்
மாதவரம் - 35 மில்லி மீட்டர்
புழல் - 30 மில்லி மீட்டர்
காஞ்சிபுரம் - 17 மில்லி மீட்டர்
வானகரம் - 10 மில்லி மீட்டர்
பொத்தேரி - 8 மில்லி மீட்டர்
செவ்வாய்பேட்டை - 8 மில்லி மீட்டர்

வரும் நாள்களிலும், பகலில் நல்ல வெயில் கொளுத்தும்பட்சத்தில் இரவில் மழை பெய்யும். ஒரு வேளை உங்கள் பகுதியில் மழை பெய்யாவிட்டால், மறுநாள் நிச்சயம் பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT