தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.43 கோடி தங்கம் உள்ளிட்டவை பறிமுதல்

1st Jul 2022 05:58 PM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் 1.43 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு சாதனங்கள் மற்றும் குங்குமப்பூ பறிமுதல் செய்யப்பட்டது. 

சார்ஜாவிலிருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்த, சென்னையைச் சேர்ந்த யூசுப் அலி சையது மற்றும் திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் ஆகியோர், கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையும் படிக்க- அடித்து நொறுக்கப்பட்ட தன் அலுவலகத்தைப் பார்வையிட்டார் ராகுல் காந்தி

 இத்தகவலையடுத்து, இரண்டு பயணிகளையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். 

ADVERTISEMENT

இந்த சோதனையின் போது அவர்களது உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.43 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு சாதனங்கள் மற்றும் குங்குமப்பூ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT