தமிழ்நாடு

திமுக அரசைக் கண்டித்து ஜூலை 5-இல் பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

1st Jul 2022 01:48 AM

ADVERTISEMENT

திமுக அரசைக் கண்டித்து, பாஜக சாா்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஜூலை 5-இல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பில், மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் திமுக அரசைக் கண்டித்து ஜூலை 5-இல் தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா். வடசென்னை மேற்கில் நடைபெறும் போராட்டத்துக்கு கே.அண்ணாமலை தலைமை வகிக்க உள்ளாா். தென்சென்னையில் பாஜக மாநிலச் செயலாளரும் முன்னாள் மேயருமான (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT