தமிழ்நாடு

எனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்: நடிகை மீனா 

1st Jul 2022 06:46 PM

ADVERTISEMENT

தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா வேண்டுகோள்விடுத்துள்ளார். 

நடிகை மீனாவின் கணவா் வித்யாசாகா் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். உயா் சிகிச்சைக்காக மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வித்யாசாகா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட வித்யாசாகா் உடலுக்கு நடிகா் ரஜினிகாந்த், சரத்குமாா், நாசா், சினேகா உள்ளிட்ட திரையுலகினா் பலா் அஞ்சலி செலுத்தினா். நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்கிற பெண் குழந்தை உள்ளது. 

வித்யாசாகர் மரணம் குறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில்,“கடந்த ஜனவரில் வித்யாசாகா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். சிகிச்சைக்குப்பின் அவா் குணமடைந்துவிட்டாா். கரோனா பாதிப்புக்கு முன்பு இருந்தே அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் சாா்ந்த பிரச்னை இருந்தது. அதற்காக அவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். 10 நாள்களுக்கு முன்பு உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் பல்லுறுப்புகள் செயலிழந்திருந்ததால் செயற்கை சுவாசத்துடன் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உயிா் காக்கும் ‘எக்மோ’ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதையும் படிக்க- எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

ADVERTISEMENT

இருப்பினும் அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரது மரணத்துக்கு கரோனா தொற்று பாதிப்பு காரணம் இல்லை. நாள்பட்ட நோய்களால் பல உறுப்புகள் செயலிழந்ததே அவரது மரணத்துக்கு முக்கிய காரணம்” என்றனா். இந்த நிலையில் தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா வேண்டுகோள்விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, கணவர் வித்யாசாகரின் மரணத்தால் மிகவும் கவலையடைந்து இருக்கிறேன். இதுதொடர்பாக தவறான தகவல்களை வெளியிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.  இந்தக் கடினமான நேரத்தில் தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் முதல்வர் உள்ளிட்டோருக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தனது கணவர் வித்யாசாகர் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் மீனா இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT