பாஜக வலிமையாக உள்ள பகுதிகளில் இடங்களை ஒதுக்க அதிமுகவிடம் வலியுத்தினோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக கட்சியானது தொகுதி பங்கீடு குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று முடிந்துள்ளது.
இதையும் படிக்க- தந்தைகளை தோற்கடிக்கத் துடிக்கும் மகள்கள்: இது உத்தரகண்ட் தேர்தல் ரகளை
அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறோம். அதிமுக தலைமையில் கூட்டணி கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலுவான, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டுவருகிறது.
பாஜக வலிமையாக உள்ள பகுதிகளில் இடங்களை ஒதுக்க அதிமுகவிடம் வலியுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.