திமுக வேட்பாளர் பெயர் பட்டியலை ஜன.31 ஆம் தேதிக்குள் தலைமைக்கழகத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் அனுப்ப வேண்டும் என கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கட்சித் தலைவர் தலைமையில் 27.1.2022 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் வாய்ப்புள்ள இடங்களை அவர்களை அழைத்துப் பேசிட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
கட்சித் தலைவரின் அறிவுரைப்படி, கடந்த நாடாளுமன்ற/சட்டப்பேரவைத் தேர்தலில் நம்முடைய கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட
நிர்வாகிகளுடன் சுமூகமாக கலயதாலோசித்து முடிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிக்க- சீனாவில் 2 பேருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு
பேச்சுவார்த்தை மூலம் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை தவிர, கழகம் போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி, அவற்றில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் பெயர் பட்டியலை, 31-1-2022ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்திட மாவட்டச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.