17 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சனிக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
அம்பத்தூர் துணை ஆணையராக பணியாற்றி வந்த மகேஷ், ஆவடி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு காவல் ஆணையராக மகேந்திரனும், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக சிபி சக்கரவர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | மாட்டுக்கு முன்பு சிறுநீர் கழித்ததாக இஸ்லாமியருக்கு அடி உதை...மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்
அதேபோல் தாம்பரம் காவல் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி காவல் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக உமையாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | திடீரென வைரலாகும் சில்க் ஸ்மிதா மேடையில் பாடும் விடியோ
பரங்கிமலை காவல்துணை ஆணையராக பிரதீப், அண்ணாநகர் துணை ஆணையராக சிவபிரசாத் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிவிப்பை (Official Notification) படிக்க / டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.