தமிழ்நாடு

கட்சிப் பொறுப்பிலிருந்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ. நீக்கம்: துரைமுருகன்

28th Jan 2022 08:03 AM

ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பொறுப்பிலிருந்து திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதி செயலாளர் பொறுப்பிலிருந்து கே.பி. சங்கர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள இவர், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT