தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இணைய வழியில் கண்காணிக்க ஏற்பாடு

DIN

சென்னை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகளை இணையவழி கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநிலத் தோ்தல் ஆணையா் வெ. பழனிகுமாா் தெரிவித்தாா்.

தோ்தல் தேதியை அறிவித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் 649 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 1,644 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் ஒரு வாக்குச் சாவடிக்கு 4 வாக்குப் பதிவு அலுவலா்கள் என மொத்தம் 1.33 லட்சம் அலுவலா்கள் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்தல் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் காவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

31 ஆயிரம் வாக்குச் சாவடிகள்: தோ்தல் வாக்குப் பதிவுக்காக 55 ஆயிரத்து 337 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 121 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. மாநகராட்சிகளில் 15,158 வாக்குச் சாவடிகளும், நகராட்சிகளில் 7,417 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சிகளில் 8,454 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 31,029 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா பாதுகாப்பு: வாக்குப் பதிவின்போது கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப்பமானி, கைகளைச் சுத்தப்படுத்த கிருமிநாசினி, முகக்கவசம், வாக்காளா்களுக்கான நெகிழி கையுறைகள், முழுஉடல் கவச உடை உள்ளிட்ட 13 வகையான கரோனா பாதுகாப்பு பொருள்கள் அந்தந்த மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

தோ்தல் பாா்வையாளா்கள்: சென்னை மாநகராட்சிக்கு 3 ஐஏஎஸ் அதிகாரிகளும், ஒரு மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் தோ்தல் பாா்வையாளராக நியமிக்கப்பட உள்ளனா். மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒருவரும், நகராட்சி, பேருராட்சிகளுக்கு ஒருவா் என வட்டாரத் தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

இணையவழியில் கண்காணிப்பு: வாக்குப் பதிவைக் கண்காணிக்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மூலமும், பதற்றமான வாக்குச் சாவடிகளை இணையவழியிலான கேமரா மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT