தமிழ்நாடு

நகர்ப்புற தேர்தல்: சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு

27th Jan 2022 08:00 AM

ADVERTISEMENT

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வருகின்ற பிப். 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், பிப். 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து 24 மணிநேரமும் வாகன சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வியாபரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பணத்தை உரிய ஆவணம் சமர்பித்த பிறகு திருப்பி அளிக்கவும் வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நகர்ப்புற தேர்தலை நடத்த சென்னையில் 37 உதவி தேர்தல் அலுவலர்களும் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT