தமிழ்நாடு

திருப்பூர் நகருக்குள் சுற்றிய சிறுத்தையை பிடித்தது வனத்துறை

DIN

திருப்பூர்: திருப்பூர் நகருக்குள் சுற்றிவந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி வியாழக்கிழமை பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகில் உள்ள பாப்பாங்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது. சோள காட்டில் பதுங்கியிருந்த அந்த சிறுத்தை அந்தப் பகுதியில் இரண்டு நாட்கள் ஐந்து பேரைக் காயப்படுத்தியது.

இதையடுத்து நேற்று திருப்பூர் பொங்குபாளையம் அருகில் விவசாய நிலங்களும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பகுதியில் அந்த சிறுத்தை புகுந்து,

நாய் ஒன்றை அடித்து சாப்பிட்டு விட்டு சாவகமாசமாக பாதி இறைச்சியை அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டது.

கூண்டிற்குள் அடைக்கப்பட்ட சிறுத்தை

வனத்துறையினர் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் சிறுத்தை நேற்று இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை இன்று காலையும் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அந்த சிறுத்தை திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள அம்மாபாளையம் அருகே தண்ணீர்பந்தல் எனும் இடத்தில் மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றுக்குள் புகுந்தது. அந்த பகுதியில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரை கடித்து குதறியதில் அவர் படுகாயமடைந்தார்.

மேலும் இந்த தகவல் கேள்விப்பட்டு சிறுத்தையை பிடிப்பதற்காக அங்கு வந்த வேட்டை தடுப்பு காவலர் பிரேம் குமார் என்பவரையும் சிறுத்தை தாக்கியது. இதில் இருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் அம்மாபாளையம் பகுதியில் முகாமிட்ட வனத்துறை உள்ளிட்ட குழுவினர் சிறுத்தையை கண்காணித்து மயக்க ஊசியை செலுத்தினர். அதன்பின், சிறுது நேரத்தில் மயக்கமடைந்த சிறுத்தை கூண்டிற்குள் அடைத்து எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து பிடிபட்ட சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு எந்த வனப் பகுதிக்குள் விடுவது என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT