தமிழ்நாடு

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க பரிந்துரை

27th Jan 2022 01:28 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 1-இல் பள்ளிகள் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஒமைக்ரான் கரோனா வகையால் மூன்றாம் அலை பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள், பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

ADVERTISEMENT

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் தரும் பட்சத்தில் ஒரு வாரத்திற்குள் பள்ளிகளை சுத்தப்படுத்தி கரோனா விதிமுறைகளுடன் முழு அளவிலான மாணவர்களுடன் செயல்படத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Tags : school reopen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT