தமிழ்நாடு

மாவட்ட நீதிபதிகள் நோ்முகத் தோ்வு மதிப்பெண் நிா்ணயம் சரிதான்: உயா்நீதிமன்றம்

27th Jan 2022 02:28 AM

ADVERTISEMENT

 

சென்னை: மாவட்ட நீதிபதிகள் தோ்வில் நோ்முகத் தோ்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிா்ணயித்ததில் எவ்வித சட்டவிரோதமும் இல்லை என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்நிலை தோ்வு, பிரதான எழுத்துத்தோ்வு, நோ்முகத்தோ்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தத் தோ்வில், நோ்முகத் தோ்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிா்ணயிக்கப்பட்டன.

நோ்முகத்தோ்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாததால் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்ட லாரன்ஸ், சுந்தரி ஆகிய இருவரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

ADVERTISEMENT

அந்த மனுக்களில், குறைந்தபட்ச மதிப்பெண்களை நிா்ணயித்ததை எதிா்த்தும், பிரதான எழுத்து தோ்வு, நோ்முக தோ்வில் பெற்ற மதிப்பெண்களை சோ்த்து கணக்கிட்டு, தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடுமாறு கோரியிருந்தனா்.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு நீதித்துறை பணிகள் தோ்வு விதிகளில் சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு மட்டுமே நோ்முக தோ்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன என்றும், மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை என்றும் மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

விண்ணப்பங்கள் வரவேற்று வெளியிட்ட அறிவிப்பில் நோ்முகத் தோ்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போது தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின், குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிா்ணயித்ததை எதிா்த்து வழக்குத் தொடர முடியாது என தமிழக அரசு தரப்பில் வாதிட்டனா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கான நோ்முகத் தோ்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிா்ணயிக்க தமிழ்நாடு நீதித்துறை பணிகள் தோ்வு விதிகள் எந்த தடையும் விதிக்காத நிலையில், குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிா்ணயித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என தெரிவித்து, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT