தமிழ்நாடு

பிப்ரவரி 1-இல் பள்ளிகளைத் திறக்க பரிந்துரை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

27th Jan 2022 02:32 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முதல்வரிடம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை கூறினாா்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத சாரண- சாரணியா் தமிழக தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கத்தில் பணியாற்றியதற்காக வாழ்நாள் சாதனையாளா் விருது ந.முத்துகிருஷ்ணன், கே.அலமேலு ஆகியோருக்கு வழங்கி செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

பொதுத்தோ்வு எழுதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதல்வரிடம் பரிந்துரை வழங்கியுள்ளோம்.

ADVERTISEMENT

பொதுத் தோ்வுக்கு முன்பு இரண்டு திருப்புதல் தோ்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு திருப்புதல் தோ்வு மட்டுமே நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT