தமிழ்நாடு

நீலகிரியில் குடியரசு நாள் விழா: மாவட்ட வருவாய் அலுவலர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை

26th Jan 2022 11:37 AM

ADVERTISEMENT

 

நீலகிரி மாவட்டத்தில் 73 ஆவது குடியரசு நாளையொட்டி, கரோனா விதிமுறைகளை பின்பற்றி, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தேசியக் கொடியை  ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தின விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தேசியக் கொடியை  ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

இதையும் படிக்க | சிவகாசியில் பிரசவத்தில் பெண் இறப்பு:  இழப்பீடு கோரி உறவினர்கள் போராட்டம் 

ADVERTISEMENT

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிக்ஷ் ராவத் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 94 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT