தமிழ்நாடு

விருதுநகரில் குடியரசு நாள் விழா: தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆட்சியர் மரியாதை

DIN

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில்  73 ஆவது குடியரசு நாளையொட்டி
தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி ஏற்றி வைத்து புதன்கிழமை மரியாதை செலுத்தினார். பின்னர் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக சமாதானப் புறாக்களையும் மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார். 

அதைத் தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். 

பின்னர் சிறப்பாக பணியாற்றிய 140 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார்.

பின்னர் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய, மருத்துவத்துறை, வருவாய் துறை சமூக நலத்துறை,வேளாண்துறை  உள்ளிட்ட 20 துறைகளைச் சேர்ந்த 77 அலுவலர்களுக்கு நற்சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். 

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர் ஆண்டு பராமரிப்பு மானியம் ரூ.25 ஆயிரம் வீதம் 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சிலம்பம், பரதம் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். மனோகர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT