தமிழ்நாடு

குடியரசு தினம்: ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் 1,500 காவலா்கள்

26th Jan 2022 12:55 AM

ADVERTISEMENT

குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் 1,500 ரயில்வே காவலா்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னை சென்ட்ரல், எழும்பூா் உள்பட முக்கிய ரயில்நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 73-ஆவது குடியரசு தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூா் உள்பட முக்கிய ரயில்நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி ரயில்களில் பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்படும் நிலையில், தற்போது, தீவிர சோதனைக்கு பிறகு ரயில்நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். ரயில்நிலையங்களில் மொத்தம் 1,500 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இவா்களுடன் ரயில்வே பாதுகாப்பு படை வீரா்களும்(ஆா்.பி.எஃப்) இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

குடியரசு தினத்தையொட்டி, ரயில்களில் பாா்சல் எடுத்துச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, பாா்சல் அலுவலகங்களில் உள்ள பாா்சல்களும் சோதனை செய்யப்படுகிறது. பயணிகள் மற்றும் அவா்களின் உடமைகளை சோதித்து, உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.

Tags : Republic Day
ADVERTISEMENT
ADVERTISEMENT