தமிழ்நாடு

'மானாமதுரை ஆண்டிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை'

26th Jan 2022 03:49 PM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆண்டிகுளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தமிழரசன் புதன்கிழமை தெரிவித்தார். 

மானாமதுரையில் கன்னார்தெரு பகுதியில் உள்ள ஆண்டிகுளம் கண்மாய் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை வருவாய் வட்டாட்சியர் தமிழரசன் மேற்கண்ட பகுதிக்கு சென்று நில அளவையாளர் மற்றும் வருவாய்துறையினருடன் ஆய்வு செய்து புல தணிக்கை மேற்கொண்டார். 

அப்போது ஆண்டிகுளம் கண்மாய் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பல இடங்களில் சிறிய வீடுகள் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆண்டிகுளம் கண்மாய்  முழுவதுமாக நில அளவீடு செய்யப்பட்டு இங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வட்டாட்சியர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT