தமிழ்நாடு

எம்ஜிஆா் சிலை உடைப்பு: எடப்பாடி கே. பழனிசாமி, விஜயகாந்த் கண்டனம்

26th Jan 2022 12:29 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் எம்ஜிஆா் சிலை உடைக்கப்பட்டதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக தலைவா் விஜயகாந்த் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே. பழனிசாமி: தஞ்சாவூா் வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலா் எம்ஜிஆா் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனா். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எம்ஜிஆா் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியைச் சீா்குலைக்கவும் நினைப்போா் மீது தமிழக அரசு மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷமச் செயல்கள் இனியும் தொடா்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

விஜயகாந்த்: எம்ஜிஆா் சிலை சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டதை அறிந்து வேதனையடைந்தேன். சமீப காலமாக பெரியாா் சிலை உள்ளிட்ட தலைவா்களின் சிலைகள் சேதப்படுத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. தலைவா்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT