தமிழ்நாடு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

DIN

திருப்பூர்: உடுமலையை அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள அமராவதி காகித ஆலையை நிரந்தமாக மூடக்கோரி கிராம மக்கள், விவசாயிகள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பள்ளபாளையம் கிராம மக்கள், விவசாயிகள் என 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தார். இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் பள்ளபாளையத்தில் கடந்த 9 ஆண்டுகளாக தனியாருக்குச் சொந்தமான அமராவதி காகித ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பல்வேறு ஊர்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை மறுசூழற்சி செய்து காகிதம் தயாரிக்கின்றனர்.

இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகை, தூர்நாற்றம் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுகிறது. மேலும், நிலத்தடி நீர் மாசடைவதுடன், கால்நடைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

ஆகவே, இந்த ஆலையை மூடக்கோரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு காகித ஆலையை நிரந்தமாக மூட வேண்டும் என்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்திடமும் மனு அளித்தனர். இந்தப் போராட்டத்தில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி, துணைத்தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன், மாநகர் மாவட்டத்தலைவர் கோகுல் ரவி, ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT