தமிழ்நாடு

செய்யாறு: புதிய வருவாய் மாவட்டம் கோரி பைக் பேரணி 

25th Jan 2022 03:42 PM

ADVERTISEMENT

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கக் கோரி பைக்கில் பேரணியாக சென்று, தொகுதி எம்.எல்.ஏ.ஒ. ஜோதியிடம் செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை மனுவை செவ்வாய்கிழமை  அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2016 ம் ஆண்டு நடைபெற்ற வந்தவாசி சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார். 

அதனை நினைவூட்டும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு,  வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கக் கோரி, செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதிடம் கோரிக்கை மனு அளிக்க,  செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பைக் பேரணி நடத்திட முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, செவ்வாய்கிழமை திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் அருகில் தொடங்கிய பைக் பேரணி மார்க்கெட், காந்தி சாலை,  பஸ்நிலையம், ஆற்காடு சாலை வழியாகச் சென்று சட்டமன்ற அலுவலகத்தில்முடிவடைந்தது. பின்னர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை அடங்கிய மனுவினை எம்.எல்.ஏ.ஒ.ஜோதிடம் அளித்தனர். 

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் அ.பரணிராஜன், வி.ரவி, எம்.புகழேந்தி, ஒருங்கிணைப்பாளர் ப.நடராஜன், அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT