இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 110.35 அடியிலிருந்து 109.90 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 815 கன அடியிலிருந்து 827 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 78.26டி.எம்.சியாக இருந்தது.
ADVERTISEMENT
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.