தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்

25th Jan 2022 03:06 PM

ADVERTISEMENT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா பரவலைக் காரணமாக வைத்து தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதை எதிர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா பேரிடர் ஒரு காரணமாக முன்வைக்கப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தேர்தல் அறிவிப்பிற்கு கெடு விதித்துள்ளதால் அதை எதிர்த்து தீர்ப்பு வழங்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், கரோனாவைக் காரணம் காட்டாமல் தேர்தலை நடத்தவேண்டும் என்கிற தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT