தமிழ்நாடு

'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை தயார்' - மாநில தேர்தல் ஆணையம்

25th Jan 2022 02:03 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்று 3-ஆவது அலை தீவிரம் அடைந்துள்ளதால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி மருத்துவா்கள் நக்கீரன், பாண்டியராஜ் உள்பட பலா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு 3-வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,  மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், ' நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். 

ADVERTISEMENT

மேலும், சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்த பிறகே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. கரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT