தமிழ்நாடு

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் பொதுத் தமிழ் போட்டித் தேர்வு 

24th Jan 2022 02:52 PM

ADVERTISEMENT

 

அரசுப் பணிக்கான அறிவுத் தேடல் என்ற வாசகத்துடன் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்தும் பொதுத் தமிழ்   போட்டித் தேர்வு - 2022, பிப்ரவரி 6ஆம் தேதி இணைய வழியில் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை, இணைய வழியில் கூகுள் படிவம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க நுழைவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை 7550151584 என்ற ஜி-பே எண்ணில் செலுத்தலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31, 2022.

இதையும் படிக்க.. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடு

ADVERTISEMENT

தமிழ் இலக்கணம் என்ற பாடத்திட்டத்தில் நடைபெறும் இந்தப் போட்டித் தேர்வில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.25,000 ரொக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.15,000மும், மூன்றாம் பரிசாக ரூ.10,000மும், ஆறுதல் பரிசாக, 50 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தொகுக்கப்பட்டுள்ள 'டிஎன்பிஎஸ்சி சமச்சீர் தமிழ் இலக்கணம்' பாடநூல், முன்பதிவு செய்த அனைவருக்கும் பிடிஎஃப் ஆக வாட்ஸ்அப்-பில் அனுப்பி வைக்கப்படும்.  போட்டித்தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் இந்த பாடநூல் தொகுப்பிலிருந்து மட்டுமே கேட்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்வது எப்படி ? 
இந்தப் போட்டித்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், நுழைவு கட்டணம் ரூ.100-ஐ 7550151584 என்ற ஜி-பே எண்ணுக்கு செலுத்தி, அதற்கான ஆதாரத்துடன் ‘டிஎன்பிஎஸ்சி தமிழ் இணையதள போட்டி’ என்று டைப் செய்து தங்களது பெயர் மற்றும் முகவரியை 9962600038-என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். 

பதிவு செய்த தேர்வர்களுக்கு, போட்டித்தேர்வுக்கான பாடநூல் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT