தமிழ்நாடு

குடியரசு நாள் தேநீர் விருந்து ஒத்திவைப்பு: தமிழக ஆளுநர் மாளிகை

DIN

குடியரசு நாளன்று தமிழக ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர, குடியரசு நாளன்று தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது மரபு.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்தியில்,

கரோனா பரவல் காரணமாக இந்தாண்டு குடியரசு நாளன்று நடைபெறவிருந்த தேநீர் விருந்தானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தற்போதைய நிலை சீரான பிறகு தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்படும்.

மேலும், தமிழக மக்கள் அனைவரும் கரோனா விதிமுறைகள் மற்றும் அரசின் அறிவுரைகளை பின்பற்றுமாறு தமிழக ஆளுநர் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT