தமிழ்நாடு

குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு: ஆளுநர் மாளிகை தகவல்

24th Jan 2022 03:24 PM

ADVERTISEMENT

குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடக்கவிருந்த தேநீர் விருந்து கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுகிறது.

கரோனா பரவல் குறைந்த பின்னர், வேறொரு நாளில் தேநீர் விருந்து நடைபெறும். தமிழக அரசு வழிகாட்டுதலின்படி கரோனா விதிமுறைகளை தமிழக மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT