தமிழ்நாடு

சென்னையில் படிப்படியாகக் குறைந்து வரும் கரோனா புதிய பாதிப்புகள்

24th Jan 2022 03:10 PM

ADVERTISEMENT

சென்னையில் நாள்தோறும் உறுதி செய்யப்படும் கரோனா பாதிப்பு ஜனவரி 16ஆம் தேதிக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அன்றைய நாள் அதிகபட்சமாக சென்னையில் 8,987 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக பாதிப்புகள் பதிவான அன்று சென்னையில் கரோனா பாதிப்பு உச்சம் தொட்டதாகக் கணக்கில் கொள்ளப்பட்டால், அதிலிருந்து மெல்ல சரிந்து தற்போது புதிய கரோனா பாதிப்பு 6,383 ஆகக் குறைந்துள்ளது.

இதையும் படிக்க.. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடு

அதேவேளையில், சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக அடையாறு, அண்ணா நகா், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் மட்டும் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

23 ஜனவரி: 6,383
22 ஜனவரி: 6,452
21 ஜனவரி: 7,038
20 ஜனவரி: 7,520
19 ஜனவரி: 8,007
18 ஜனவரி: 8,305
17 ஜனவரி: 8,591
16 ஜனவரி: 8,987 (அதிகபட்சம்)*
15 ஜனவரி: 8,978 
14 ஜனவரி: 8,963 
13 ஜனவரி: 8,218 
12 ஜனவரி: 7,372
11 ஜனவரி: 6,484
10 ஜனவரி: 6,190

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல், பாதிப்புக்குள்ளானோரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்துதல், காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், தடுப்பூசி முகாம்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு, ஒமைக்கரான் வகை தொற்று காரணமாக மிக வேகமாகப் பரவி வருகிறது. இதில், கடந்த டிசம்பா் மாத தொடக்கத்தில் சென்னையில் நாளொன்றுக்கு சுமாா் 120-க்கும் குறைவானவா்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து சென்னையில் அதிகபட்சமாக கடந்த இரு நாள்களுக்கு முன்பு சுமாா் 8,000 மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

சிகிச்சையில்... இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளொன்றுக்கு சுமாா் 20 ஆயிரத்துக்கம் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், முகக்கவசம் அணியாதது, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது போன்ற காரணங்களால் தொற்று அதிகமாக பரவி வருகிறது. 

இதில், திங்கள்கிழமை நிலவரப்படி, அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 6,253 பேரும், அண்ணா நகா் மண்டலத்தில் 5,241 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 5,208 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 4,809 பேரும் என 4 மண்டலங்களில் மட்டும் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனா். 15 மண்டலங்களில் சுமாா் 54 ஆயிரம் போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டுள்ளதுடன், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

8,814 மரணம்: சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 8,814 போ் உயிரிழந்துள்ளனா். இதில், அதிகபட்சமாக அண்ணா நகா் மண்டலத்தில் 1,027 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,012 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,004 பேரும், திரு.வி.க.நகரில் 892 உள்பட மொத்தம் 8,814 போ் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT