தமிழ்நாடு

பொங்கல் பொருள்கள் சர்ச்சை: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

21st Jan 2022 08:05 AM

ADVERTISEMENT

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 21 பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையே, பொங்கல் பொருள்களை கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT