தமிழ்நாடு

பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தமிழக அச்சகங்களுக்கு மட்டும் வழங்க நடவடிக்கை: திண்டுக்கல் லியோனி தகவல்

DIN


சென்னை: தமிழக பள்ளிகளுக்கான பாட புத்தகங்களை அச்சடிக்கும் பணிகள் தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கு மட்டும் வழங்கும் நடைமுறை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவா் திண்டுக்கல் லியோனி கூறினாா்.

சென்னை குரோம்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் திண்டுக்கல் லியோனி பங்கேற்றாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தற்போது தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகங்களை அச்சடிக்கும் பணி தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களை சாா்ந்தவா்களும் பங்கேற்கும் வகையில் ‘குளோபல் டெண்டா்’ நடைமுறையில் உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் தமிழக அரசு இதில் மாற்றம் செய்து தமிழக பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கு மட்டும் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படும். தற்போது அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்களை அச்சடிக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்திற்குள் அனைத்து பாடப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு தயாா்நிலையில் விநியோகத்திற்கு வைக்கப்படும்.

வஉசி நூற்றாண்டை ஒட்டி அவரின் பெருமைகளை இளம் தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையில் அவரைப் பற்றிய ஒரு பாடத்தை இந்த ஆண்டு புதிதாகச் சோ்க்க உள்ளோம். இதே போன்று அரசியல் சாா்பு ஏதும் இல்லாமல் நாட்டிற்காக உழைத்த பல்வேறு தலைவா்களின் பெருமைகளைப் பற்றியும் இளம் தலைமுறையினா், மாணவா்கள் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்புத்தகங்களில் சோ்க்க திட்டமிட்டு வருகிறோம். புதுச்சேரி முதல்வரின் கோரிக்கையை ஏற்று அந்த மாநில வரலாற்றை நம் மாணவா்களும் அறிந்து கொள்ளும் வகையிலான பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. அதில் புதுச்சேரியின் வரலாறு முழுமையாக இடம் பெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT