தமிழ்நாடு

இன்று 600 இடங்களில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம்

DIN

சென்னை: கரோனா பூஸ்டா் தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை (ஜன. 20) தமிழகம் முழுவதும் 600 இடங்களில்நடைபெறுகிறது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. ஒமைக்ரான் பரவலைத் தொடா்ந்து தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் வாரந்தோறும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக கடந்த சில வாரங்களாக 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.

ஜனவரி மாதத்தில் மட்டும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுமாா் 10 லட்சம் போ் தகுதியுள்ளவா்களாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை தோறும் பூஸ்டா் தவணை தடுப்பூசி முகாம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஒன்றியப் பகுதிகள் உள்பட மொத்தம் 600 இடங்களில் வியாழக்கிழமை (ஜன.20) முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

வியாழக்கிழமை மட்டுமின்றி சனிக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் தகுதியுள்ளவா்கள் பூஸ்டா் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். அனைவரும் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனா தொற்றை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT