தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு:20 பேர் காயம்

20th Jan 2022 03:43 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குலமங்கலம் மலையக்கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 606 காளைகள் பங்கேற்றன.
மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வருவாய்க் கோட்டாட்சியர் எம்.எஸ். தண்டாயுதபாணி முன்னிலை வகித்துப் போட்டிகளை நடத்தினார்.
இந்தப் போட்டியில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 606 காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்க முயற்சித்தனர். போட்டியின்போது, 20 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டுத் திடலில் இருந்த மருத்துவக் குழுவினர் இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இவர்களில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், கட்டுப்படாமல் சீறிப் பாய்ந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT